வருகின்ற உள்ளாட்சி தேர்தலில் கோவை மாநகராட்சி மற்றும் நகராட்சியை கைப்பற்றி விடலாம் என இந்த சோதனையை மேற்கொண்ட வருவதாக முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் தெரிவித்துள்ளார்.
கோவை குனியமுத்தூர் பகுதியில் உள்ள முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி வீட்டில் காலை 6 மணி முதல் 10 க்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இதனை தொடர்ந்து அதிமுக தொண்டர்கள் முன்னாள் அமைச்சர் வீட்டின் முன்பு குவிந்த வண்ணமாகவே இருக்கின்றனர். அதேபோல கோவை மாவட்ட 8 அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அமைச்சர் வீட்டின் முன்பு அமர்ந்திருக்கின்றனர்.
இதனை தொடர்ந்து, முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், திமுக தன்னுடைய பரம்பரை அடக்குமுறை அரசியலை தொடர்ந்து இருக்கிறது. இந்த சோதனையின் மூலம் கொங்கு மண்டலத்தில் மீண்டும் திமுக செல்வாக்கைப் பெற்று விடலாம் என்று நினைக்கிறது. வருகின்ற உள்ளாட்சி தேர்தலில் கோவை மாநகராட்சி மற்றும் நகராட்சியை கைப்பற்றி விடலாம் என்று பயன்முறுத்துவதற்காக இந்த பணியை திமுகவின் தலைவர் மு.க.ஸ்டாலின் தொடங்கி இருக்கிறார் என தெரிவித்த அவர் நிச்சயமாக உள்ளாட்சி தேர்தலில் நின்று வெற்றியை சந்திப்போம் என கூறினார்.