காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட பிறகு முதன் முறையாக காஷ்மீர் சென்ற ராகுல்காந்தி தொண்டர்களிடையே பேசுகையில் இவ்வாறு பேசினார்.
ஆர்.எஸ்.எஸ். பொய் பிரச்சாரத்தால் காஷ்மீர் மக்கள் மீது பாஜக அரசு தாக்குதல் தொடுத்ததாக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி குற்றம் சாட்டியுள்ளார். காஷ்மீருக்குச் சென்ற அவர் காஷ்மீருக்கு மீண்டும் முழு மாநில அந்தஸ்து வழங்கப்பட வேண்டும். நேர்மையான, சுதந்திரமான தேர்தல் நடத்தப்பட வேண்டும். ஆர்.எஸ்.எஸ். பொய்ப்பிரச்சாரத்தால் பாஜக அரசு இந்த மக்கள் தாக்குதல் தொடுத்து வருகிறது.
அடக்குமுறையை ஏவிவிடுகிறது. இதனால் காஷ்மீர் மக்கள் வலியையும் துன்பத்தையும் எதிர்கொண்டு வருகிறார்கள். நாட்டிலுள்ள ஜனநாயக சக்திகள் இதற்கெதிராக தொடர்ந்து போராட முன்வரவேண்டும் என்று ராகுல் கேட்டுக்கொண்டார். மேலும் அவர் பேசுகையில் டெல்லிக்கு புலம்பெயரும் முன்பு எங்கள் குடும்பம் அலகாபாத்தில் தான் வாழ்ந்தது. அதற்கு முன்பு எங்கள் குடும்பம் காஷ்மீரில் தான் வாழ்ந்தனர். அதனால் காஷ்மீருக்கும் எங்களுக்கும் நெருங்கிய உறவு உண்டு என்றார்.