

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் பகுதியில் மேற்கு தொடர்ச்சி மலையான கொடைக்கானல் மலையில் மலை கிராமங்கள் உள்ளன. அடர் வனப்பகுதியான இந்த பகுதியில் ஆதிவாசி மக்களான பளியர் சமூக மக்கள் வசித்து வருகிறார்கள் சிறுவாட்டுக்காடு, புளியங்கசம் உள்ளிட்ட பல கிராமங்களுக்கு சுதந்திரம் பெற்று இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த அதிமுக ஆட்சியில் தான் மின்சாரம் வந்தது. புளியங்கசத்தில் வசிக்கக்கூடிய பளியர் சமூக மக்களுக்கு 32 வீடுகளை வனத்துறையினரால் கட்டப்பட்டு வருகிறது. இந்த வீடுகள் கட்டி முடிக்கும் முன்னே அதற்கான தொகை எடுக்கப்பட்டுவிட்டதாக புகார் எழுந்துள்ளது

. இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ரெட்டியார்சத்திரம் ஒன்றியச்செயலாளர் கே.எஸ்.சக்திவேல் புளியங்கசம் பகுதியில் கட்டப்படும் வீடுகளை சென்று பார்வையிட்டார். மலைப்பகுதியில் வனத்துறையினரால் கட்டப்படும் இந்த வீடுகள் தரமற்ற வீடுகளாக கட்டி அரசின் பணம் வீணடிக்கப்பட்டுள்ளதாக புகார் தெரிவிக்கிறார்.

மேலும் பளியர்களுக்கு கட்டித்தரப்படும் இந்த வீடுகளில் நடைபெற்ற முறைகேடு ஊழல் குறித்து நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், கொடைக்கானல் மலைப்பகுதியில் ஏராளமான பளியர் பகுதி கிராமங்கள் உள்ளன. அந்த பகுதிகளிலும் வீடுகள் கட்டித்தர வேண்டும் என்று சக்திவேல் கேட்டுக்கொண்டுள்ளார்.

