

பாஜகவிற்கு இடையூறு ஏற்படுமானால் திமுகவின் பிசினசில் கை வைப்போம் என்று பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை சமீபத்தில் தெரிவித்திருந்தார். இது தொடர்பாக செய்தியாளர்கள் அமைச்சர் கே.என்.நேருவிடம் கேட்ட போது நாங்க மிசாவைவே பார்த்தவங்க. அண்ணாமலைக்கெல்லாம் பயப்படத் தேவையில்லை.. அவர் தற்போது பாஜக தலைவராகி இருப்பதால் தன்னை வெளிக்காட்டிக்கொண்டு, இப்படியெல்லாம் மிரட்டல் தொனியில் பேசி வருகிறார். அண்ணாமலையெல்லாம் எங்களுக்கு ஒரு ஆளே இல்லை என்று அமைச்சர் நேரு தெரிவித்தார்.

