ச்சே, இதே பொழப்பா அலையிறாங்க..

“ச்சே, இதே பொழப்பா அலையிறாங்க...”
- இது, கதையல்ல. நிஜம்

வருடம் 2016, அக்டோபர் மாதம் 6 ஆம் தேதி. கோவையிலிருந்து ஈரோட்டை நோக்கி சுமார் 120 கி.மீ. வேகத்தில் சென்ற அந்த சொகுசு கார், திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் அருகிலுள்ள ஊதியூர் என்ற இடத்தில் சாலைத் தடுப்பின் மீது மோதி விபத்துக்குள்ளாகிறது. தூக்கி எறியப்பட்ட கார், சென்டர் மீடியனைத் தாண்டி எதிர்திசையில் சுமார் 50 மீட்டர் தூரம் தீப்பொறி பறக்க பயனித்து எதிர் திசையில் வந்த மற்றொரு கார் மீது மோதி, நிற்கிறது

காரை ஓட்டி வந்த ஜெ.பிரவீன் என்ற 19 வயது இளைஞரும், அவரோடு வந்த இரு ஆண் நண்பர்களும் காயங்களோடு தப்ப, இவர்களோடு பயனித்த கோவை, சாயிபாபா காலனியைச் சேர்ந்த சுரக்ஷா என்ற 18 வயது மாணவி, கார் கதவில் பிணமாக தொங்கினார். ஒழுங்கான திசையில் பயனித்து வந்த காரில் இருந்த நெல்சன் என்ற நபரும், அவரோடு வந்த இருவரும் காயங்களோடு உயிர்பிழைத்தனர்

காவல்துறை வருகிறது. காவல்துறை அங்கு வருவதற்கு முன்பே மாவட்ட காவல்துறை அதிகாரிக்கு, உயர் மட்டத்திலிருந்து ‘இன்ஸ்ட்ரக்சன்’ பறந்திருக்கிறது. அதன்படி, பிணமாக தொங்கிய மாணவி சுரக்ஷா, திருப்பூர் அரசு பொது மருத்துவமனையின் பிணவறைக்கு அனுப்பப்படுகிறார். பிரவீன் மற்றும் அவரது நண்பர்கள் தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பப்படுகின்றனர். அவர்கள் அனைவரும் கோவையில் உள்ள ஒரு கல்லூரியில் ‘ஃபேசன் டெக்னாலஜி’ படிப்பவர்கள் என விசாரனையில் தெரிய வருகிறது. காரை படுவேகமாக ஓட்டி வந்த ஜெ.பிரவீன் மீது, இந்திய தண்டனைச் சட்டம் 304 மற்றும் 337 (கவனக் குறைவால் விபத்து ஏற்படுத்தி உயிரைக் கொல்லுதல், மற்றும் பிற உயிர்களுக்கு ஆபத்தை விளைவித்தல்) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு, உடனடியாக ஜாமீனில் விடுவிக்கப் படுகின்றனர். உயிழந்த அந்த ஏழை மாணவி சுரக்ஷாவின் பெற்றோர் கதறிய கதறல் நாலு சுவற்றைத் தாண்டி வெளியே வரவில்லை. நடந்த சம்பவங்கள் அனைத்தையும் கவனித்த நேர்மையான ஒரு ஏட்டு மட்டும், “ச்சே, இதே பொழப்பா அலையிறாங்க...” என தலையிலிருந்த தொப்பியை, கையில் எடுத்து உதறியவறாக நடையைக் கட்டுகிறார். நிற்க.

வருடம் 2019, மார்ச் மாதம் 11 ஆம் தேதி. “பொள்ளாச்சி பாலியயல் குற்றங்களுக்கும் என் மகனுக்கும் எந்த விதமான சம்பவமும் இல்லை. மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரை அழைத்து, அந்த விசயத்தை முதலில் விசாரிக்கச் சொன்னதே நான்தான்” என மீடியாக்காரர்களிடம் வாய் கிழிய கதறிக் கொண்டிருக்கிறார் துணை சபா பொள்ளாச்சி ஜெயராமன்.

சாட்சாத், அவரது மகன்தான், மேலே இரண்டாவது பாராகிராப்பில் மாணவி சுரக்ஷாவின் மரணத்திற்கு காரனமான ஜெ.பிரவீன்!

“ச்சே, இதே பொழப்பா அலையிறாங்க...” என்ற ஏட்டு சொன்னதன் அர்த்தம் இனி, மெல்ல மெல்ல வெளிச்சத்திற்கு வரும் என நம்பலாம்!

தொடர்புடைய செய்திகள்