“சொந்த மண்ணுல ‘லேண்ட்’ ஆகப்போறேன்”

“சொந்த மண்ணுல ‘லேண்ட்’ ஆகப்போறேன்”
‘பாரடரை’ கடக்கும் ‘ராக்கெட்டு’!

அது வரை வெறும் சங்கமாக இருந்த அமைப்புகளெல்லாம் அரசியல் கட்சியாக பரிணாமம் பெருவது தேர்தல் காலங்களில்தான் அதிகமாக இருக்கும். அப்படியொரு புதிய வளர்ச்சியைக் எட்டியிருக்கிறது பணையேறி நாடார் சமூகம்.

தென்மாவட்டங்களில் குறிப்பாக நெல்லை, இராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி போன்ற பகுதிகளில் வெற்றியை நிர்ணயிக்கும் சக்தியாக விளங்கி வரும் இச்சமூகத்தைச் சேர்ந்தவர் ராஜா. கடந்த சில மாதங்களுக்கு முன் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா ஆகிய மூன்று மாநில போலீசாருக்கும் ‘தண்ணி’ காட்டி, சென்னையில் கைதான அதே ‘ராக்கெட்’ ராஜாதான்.

ஆரம்பத்தில், அகில இந்திய நாடார் பாதுகாப்பு பேரவையின் நிறுவனரான நெல்லையைச் சேர்ந்த வெங்கடேச பண்ணையாரின் தளபதியாக இருந்து, அவருக்குப் பிறகு, தற்போது அவரது தம்பியான சுபாஷ் பண்ணையாரின் உற்ற நன்பனாக இருக்கும் ‘ராக்கெட்’ ராஜா, நேற்று சேலத்தில் ஒரு தனியார் திருமன மண்டபத்தில் நடந்த, தங்கள் சமூகத்தைச் சேர்ந்த பலரும் கலந்து கொண்ட புதிய அரசியல் கட்சியின் பிறப்பு விழாவில் கலந்து கொண்டார்.

கட்சியின் பெயர், ‘பனங்காட்டுப் படை’. மேடைப்பேச்சு அவருக்கு புதிதாக இருந்தாலும், அர்த்தம் ஒவ்வொன்றும் அதிரடிதான். மாங்கனி கட்சியின் ‘மருத்துவர்’ முதல் நெல்லையில் உள்ள குறிப்பிட்ட ஜாதியைச் சேர்ந்த ‘சகோதரர்’ வரை கிடைத்த சந்தர்ப்பத்தில் ஒரு சில வார்த்தைகளிளேயே வெளுத்து வாங்கி விட்டார் ‘ராக்கெட்’

சொந்த ஊர் திரு நெல்வேலி மாவட்டம் திசையன்விளை அருகிலுள்ள ஆனைகுடியாக இருந்தாலும், சில ‘கட்டுப்பாடுகளால்’ தனது சொந்த மாவட்டத்தை விட்டு தற்போது தள்ளியே நிற்கிறார் ‘ராக்கெட்’ ராஜா. அதனால்தானோ என்னவோ கொங்கு மண்டலத்தில் கட்சித் துவக்க விழாவை நடத்தியிருப்பதாகக் கூறப்படுகிறது. இருந்த போதும், அடுத்த ஆறு மாதத்தில் சொந்த மாவட்டமான திரு நெல்வேலியில் கும்பமேளாவைப் போல ஒரு கூட்டத்தைக் கூட்டி பிரமாண்டமான முறையில் தங்கள் கட்சியின் மா நாட்டை நடத்தவிருப்பதாக ‘பனங்காட்டுப் படை’ கட்சியின் துவக்க விழாவன்றே அறிவித்து விட்டார் ராஜா.

“இப்போ, வெளிச்சத்திற்கு வந்திருக்கு ராக்கெட்டு. இந்த அரசியல் கட்சி ஆரம்பிச்சதனால, நாங்க மாறிட்டோம்னு மட்டும் தப்புக் கணக்கு போட்டுறாதீங்க. பார்டரைக் கடக்கும் இந்த ராக்கெட்டு, மாநாடு நடக்கும் போது சொந்த மண்ணுல ‘லேண்ட்’ ஆகும்..” எனப் பேசப்பேச கைதட்டல்கள் பறந்தாலும், “அப்போ, என்னவெல்லாம் நடக்கப் போகுதோ?’ என்ற திகிலோடு கலைந்து சென்றது கூட்டம்

தொடர்புடைய செய்திகள்