சிவகார்த்திகேயனுக்கு ஓட்டு போட அனுமதி வழங்கிய அதிகாரி மீது நடவடிக்கை

சிவகார்த்திகேயனுக்கு ஓட்டு போட அனுமதி வழங்கிய அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக தேர்தல் அதிகாரி கூறியுள்ளார்.

பாராளுமன்ற இரண்டாம் கட்ட தேர்தல் ஏப்ரல் 18ம் தேதி நடைபெற்றது. நடிகர்கள், நடிகைகள் பலரும் காலையிலேயே தங்களுடைய வாக்குகளை பதிவு செய்தனர். இதில், நடிகர் சிவகார்த்திகேயன், ரமேஷ் கண்ணா மற்றும் ரோபோ சங்கர் ஆகியோருக்கு ஓட்டு இல்லை என கூறப்பட்டது.

வளசரவாக்கத்தில் உள்ள குட்ஷெப்பர்ட் பள்ளியில் வாக்களிக்க சென்ற சிவகார்த்திகேயனின் பெயர், வாக்காளர் பட்டியலில் இல்லை. இதனால் அவருக்கு ஓட்டு இல்லை என கூறப்பட்டது. பின்னர், அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி, சிவகார்த்திகேயன் வாக்களித்தார்.

சினிமா

இந்நிலையில், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு இன்று நிருபர்களிடம் கூறும்போது, ‘நடிகர் சிவகார்த்திகேயனின் பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லாத நிலையில் அவருக்கு வளசரவாக்கம் பள்ளியில் ஓட்டுப்போட அனுமதி வழங்கிய அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.

தொடர்புடைய செய்திகள்