news@arasiyaltoday.com
  • Monday     May, 20     09:58pm

நீட் தேர்வு ஹால் டிக்கெட் இன்று முதல் பதிவிறக்கம் செய்யலாம்

நீட் தேர்வுக்கு தமிழகத்தில் மட்டும் 1 லட்சத்து 40 ஆயிரம் பேரும் விண்ணப்பித்துள்ளனர்

மே 5 ஆம் தேதி நடைபெறவுள்ள நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை இன்று முதல் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.


நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ். மருத்துவ படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கைக்கான நீட் நுழைவு தேர்வு வரும் மே 5 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இதற்கான ஹால் டிக்கெட் இன்று முதல் www.nta.ac.in மற்றும் www.ntaneet.nic.in என்ற இணையதளங்களில் இருந்து பதவிறக்கம் செய்துகொள்ளலாம் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.


நீட் தேர்வுக்கு தமிழகத்தில் மட்டும் 1 லட்சத்து 40 ஆயிரம் பேரும் விண்ணப்பித்துள்ளனர். சென்னை, காஞ்சிபுரம், மதுரை, கரூர், நாகர்கோவில், சேலம், நாமக்கல் உள்ளிட்ட 14 நகரங்களில் தேர்வு நடைபெறுகிறது.

தொடர்புடைய செய்திகள்