news@arasiyaltoday.com
  • Monday     May, 20     09:59pm

மோடிக்காக பிரச்சாரம் செய்ததால் முதியவர் கொல்லப்பட்டாரா.. இல்லவே இல்லை.. போலீஸ் பரபரப்பு

மோடிக்காக பிரச்சாரம் செய்ததால் முதியவர் கொல்லப்பட்டாரா.. இல்லவே இல்லை.. போலீஸ் பரபரப்பு


தஞ்சாவூர்: ஒரத்தநாட்டில் கொல்லப்பட்ட முதியவர், பிரதமர் மோடிக்காக பிரச்சாரம் செய்ததற்காக கொலை செய்யப்படவில்லை, இதற்கு பின் வேறு காரணம் இருக்கிறது என்று போலீசார் விளக்கம் அளித்துள்ளனர். தஞ்சாவூர் அருகே இரண்டு நாட்களுக்கு முன் நடந்த முதியவரின் கொலை ஒன்று தேர்தல் களத்தில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. பிரதமர் மோடிக்காக தேர்தல் பிரச்சாரம் செய்ததால் இந்த கொலை நடந்ததாக கூறப்பட்டது. தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள தென்னமநாடு கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தராஜ். 75 வயது நிரம்பிய இவர் கோபிநாத் என்று இளைஞரால் கொலை செய்யப்பட்டார்.

என்ன நடந்தது


கோவிந்தராஜ் ஒரத்தநாட்டில் உள்ள கால்நடை பண்ணை அலுவலக ஊழியராக இருந்து வந்தார். இவர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் பிரதமர் மோடியின் புகைப்படம், ஜெயலலிதா, எம்ஜிஆர் புகைப்படங்களை வைத்துக்கொண்டு ஒரத்தநாடு பகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்தார்.



பரபரப்பு

அப்போது இவர் கோபிநாத் என்ற இளைஞரால் தாக்கப்பட்டார். காயங்களுடன் வீட்டிற்கு சென்ற இவர் இரவு பலியாகிவிட்டதாக செய்திகள் வந்தது. இந்த சம்பவம் தமிழகம் முழுக்க பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.




மிக மோசம்


இது தொடர்பாக இணையத்தில் அதிமுக - பாஜகவினர் கடுமையான விமர்சனங்களை பதிவு செய்தனர். இந்த கொலையை செய்த கோபிநாத் திமுகவை சேர்ந்தவர் என்றும் தகவல்கள் வெளியானது. அதேபோல் திமுகவினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறினார்கள்.


ஒரத்தநாடு போலீஸ்

இந்த நிலையில் இந்த கொலை குறித்து ஒரத்தநாடு போலீசார் திடுக்கிடும் உண்மைகளையே வெளியிட்டு இருக்கிறார்கள். அதன்படி கொல்லப்பட்ட கோவிந்தராஜுக்கு மனநலனில் சிறிய சிறிய பாதிப்புகள் இருந்திருக்கிறது. மனரீதியான சில பிரச்சனைகள் வயது முதிர்வு நீண்ட நாட்களாக இருந்துள்ளது.





தொடர்புடைய செய்திகள்