எந்த வாக்குறுதியையும் பிரதமர் மோடி நிறைவேற்றவே இல்லை- உதயநிதி விமர்சனம்

எந்த வாக்குறுதியையும் பிரதமர் மோடி நிறைவேற்றவே இல்லை- உதயநிதி விமர்சனம்

திருவள்ளூர்: கடந்த 2014-ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளை மோடி நிறைவேற்றவில்லை என உதயநிதி ஸ்டாலின் கடுமையாக சாடினார். திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டை அடுத்த ஆர் கே பேட்டை, அம்மையார்குப்பம், அத்திமாஞ்சேரிப்பேட்டை, பொதட்டூர்பேட்டை ஆகிய பகுதிகளில் அரக்கோணம் எம்பி வேட்பாளர் ஜெகத்ரட்சகனை ஆதரித்து நடிகர் உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் செய்தார்.

அப்போது அவர் கூறுகையில் நீட் தேர்வால் மாணவர்களும், ஜிஎஸ்டியால் பொதுமக்களும் வியாபாரிகளும் பெருமளவில் பாதிக்கப்பட்டு உள்ளனர். மத்தியில் பாஜக தமிழகத்தில் அதிமுக அரசுகளால் பொதுமக்களுக்கு எவ்வித பயனும் இல்லை.

இந்த தேர்தலில் திமுக கூட்டணிக்கே வாக்களியுங்கள். திமுக கூட்டணி வெற்றி பெற்றால் விவசாயக் கடன்கள் ரத்து செய்யப்படும். கூட்டுறவு வங்கிகளில் 5 அல்லது 5 பவுனுக்கு கீழ் ஏழைகள் அடகு வைத்த நகைகளுக்கான கடன்கள் ரத்து செய்யப்படும்.

தொடர்புடைய செய்திகள்