பாலியல் குற்றவாளிகளுடன் தளபதி மு.க.ஸ்டாலினின் தொண்டனுக்கு தொடர்பா...?

பாலியல் குற்றவாளிகளுடன் தளபதி மு.க.ஸ்டாலினின் தொண்டனுக்கு தொடர்பா...?

தமிழகத்திற்கே தலைகுனிவை ஏற்படுத்திய அந்த பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தில், இத்தனை ஆண்டுகளாக எந்தப் பிரச்சனையும் வெளியே வரவிடாமல் பாதிக்கப்பட்ட அந்த பெண் குழந்தைகள் மிரட்டி பயமுறுத்தப் பட்டிருக்கிறார்கள் என்றால், அரசியலும், அது சார்ந்த ரவுடியிசமும் கண்டிப்பாக அந்த காமுகர்களின் பின்னணியாக இருக்க வேண்டும் என்பதே பலரின் கருத்து. இதில், ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என்ற பேதமெல்லாம் இருக்க முடியாது

தற்போது இதற்காக பலரும் குரல் கொடுத்து வரும் நிலையில், அதில் பலமான குரலாக ஒலிப்பது தி.மு.க. தலைவர் ஸ்டாலினின் குரல்தான். அதே நேரத்தில், இந்த காமவெறி கும்பலின் முக்கியப் புள்ளியான திருநாவுக்கரசின் நெருங்கிய நன்பனான ஒருவரையும் பிடித்து விசாரித்தால், இன்னும் ஏராளமான விசயங்கள் வெளிச்சத்திற்கு வரும் என்ற கருத்தும் பகிரப்பட்டு வருகிறது. அந்த நபர் பொள்ளாச்சி தி.மு.க.வின் முக்கிய நபர் என்பதுதான் விசயமே.

பொள்ளாச்சியைச் சேர்ந்தவர் தென்றல் செல்வராஜ். கோவை மாவட்ட தி.மு.க. பொறுப்பாளராக இருக்கும் இவரின் குடும்பம் அரசியல் பாரம்பரியம் மிக்கது. இவரது மகனான தென்றல் மணி என்கிற மணிமாறன் பொள்ளாச்சி தி.மு.க. மாணவரணியில் முக்கியப் பொறுப்பில் இருக்கிறார்.

இவரும் கைதாகியிருக்கும் திருநாவுக்கரசும் நகமும் சதையும் எனக் கூறப்படுகிறது. ஒரு இளநீரைக் கூட ஷேர் செய்து குடிக்கும் பழக்கம் உள்ள தென்றல் மணிமாறனுக்கு திருநாவுக்கரசின் லீலைகள் அத்தனையும் தெரியும் என்றும், போலீஸ் தேடும் போது, அவரது ஆலோசனைப்படியே தலை மறைவாகியிருந்தார், பின்னர் ‘வாட்ஸ் அப்’பில் தகவல் சொல்லி விட்டு காவல் துறையிடம் சரண்டர் ஆனார் என்றும் எனவே, கூடிய விரைவில் தி.மு.க. முக்கியப் புள்ளியான இவரும் சிக்குவார் எனவும் காவல் துறை வட்டாரத்திலிருந்து தகவல்கள் கசிகின்றன.

ஒருவேளை அப்படி நடந்தால், அதன் பாதிப்பு கொங்கு மண்டலம் மட்டுமல்ல, தமிழகம் முழுக்கவே பாராளுமன்றம் மற்றும் இடைத்தேர்தலில் தி.மு.க.வின் வாக்குகளை கடுமையாக பாதிக்கும் எனக் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்